Wednesday, July 25, 2012

32 ஆம் திருமுறை மாநாடு

32 ஆம் திருமுறை மாநாடு 

27 சூலை 2012 முதல்  29 சூலை 2012 வரை
அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவில் 
டேங் சாலை , சிங்கப்பூர் 

அன்புள்ள சிவநேயச் செல்வர்களே,

பன்னிரு திருமுறைகள் வழியே சைவ சமயத்தின் சிறப்பு , பெருமை, நெறிமுறைகள் , இவைபற்றி அனைவரும் நன்கு தெளிவாக அறிந்து சொள்ளுதல், திருமுறைகளை ஓதிப் பயன் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் முப்பத்திரண்டாம் திருமுறை மாநாடு 2012 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் நாள் முதல் 29 ஆம் நாள் வரை (வெள்ளிக்கிழமை , காரிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மூன்று நாட்களிலும் சிங்கப்பூர் டேங் சாலை , அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது, மாநாட்டின் ஒரு அங்கமான அறுபத்து மூவர் குரு பூசை விழா மட்டும் டெப்போ சாலையிலுள்ள அருள்மிகு ருத்திர காளியம்மன் ஆலயத் திருமண மணடபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 முதல் பிற்ப்பகல் 1.00 மணிவரை நடைபெறும் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக ஜோடார்ன் நாட்டிற்கான , உறைவிடம் கொள்ளாத, சிங்கப்பூர் அரசத் தூதர் திரு, கே.கேசவபாணி அவர்கள் பங்கேற்கிறார்கள், தமிழ்நாட்டின் பவானியிலிருந்து வரும் சிவத்திரு.அ . தியாகராசன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புச் சொற்ப்பொழிவுகளை  வழங்குகிறார்கள்.

உங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, எல்லாம் வல்ல சிவபெருமான் அருளைப் பெறுங்கள் என்று பணிவன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

திருமுறை மாநாட்டு எற்பாட்டுக் குழுவினர் 

நிகழ்ச்சி நிரல் 
தமிழ் : http://singaithirumurai.org/TM32-Invitation-Tamil.pdf
ஆங்கிலம் : http://singaithirumurai.org/TM32-Invitation-English.pdf 

1 comments:

தஞ்சை கோ.கண்ணன் on September 4, 2012 at 7:58 PM said...

பார்ப்பனரின் பெயர் மாற்றம்

"ஸ்ரீ மகாதேவ பக்த விஜயம் "

(பெரிய புராணம்)

சென்னையில் உபன்யாசம் 1

என போனால் போகிறது என்று அடைப்புக் குறியில் போட்டார்களே அவர்கட்கு நம் நன்றி ! தான் யார் என அடையாளம் காட்டிய நற்செயலுக்கும் நன்றி !


கல்வெட்டு அறிஞர் முனைவர் நாகசாமி அவர்கள் கருதுகோளாகிய " வேதகாலப் பண்பாடு, பார்ப்பனர்கள் (Brahmanas) , சமக்ருதமொழி வழி தமிழ் மொழியின் தோற்றகால வளர்ச்சிக்கு வித்திட்டது" என அவர் தனது
Mirror of Tamil and Sanskrit
Dr. R.Nagaswamy
[A new book with title Mirror of Tamil and Sanskrit by Dr. R.Nagaswamy has been published in 2012, by Tamil Arts Academy] என்ற நூலில் கூறுகிறார் !

இன்றும் கூட அவர்கள் எவ்வாறு தமிழை வளர்க்கிறார்கள் ? பார்த்து மகிழுங்களேன் ! வாழ்க தமிழ் ! தமிழர் ஒற்றுமை !
சேக்கிழார் பெருமான் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் சைவப் பெருமக்களுக்கு உயிர் போன்றது !

பெயர் மாற்றங்கள் :

வேத வழி வந்த முனைவர் நாகசாமி வழியில் தமிழ்நாட்டின் தலை நகராம் சென்னை மாம்பலத்தில் சிவா விட்ணு கோயில் வாயிலிலும் , நங்கநல்லூரில் தில்லை கங்கா நகர் கோயில் ஒன்றிலும் பெயர் மாற்றம் செய்தனர் :

பெரிய புராணத்தின் இன்றய இவர்களால் சூட்டப் பட்ட பெயர் :

"ஸ்ரீ மகாதேவ பக்த விஜயம் "

(பெரிய புராணம்)

என போனால் போகிறது என்று அடைப்புக் குறியில் போட்டார்களே அவர்கட்கு நம் நன்றி ! தான் யார் என அடையாளம் காட்டிய நற்செயலுக்கும் நன்றி !

காஞ்சி மட அருளாசி பெற்ற இவர்கள் செயலை நமது சைவ மடாலயங்களும், சைவர்களும் உலகத் தமிழரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்வோம் !

Post a Comment

 

Site Info

My Blog List

Followers