Monday, August 13, 2012

திருமந்திரம் முற்றோதல்


திருச்சிற்றம்பலம்
திருமந்திரம் முற்றோதல்


சிவபெருமானின் அருளால்குயின்ஸ்வேயில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் ஆவணி மாதம் 3 மற்றும் 4-ம் தேதி (19/08/2012 & 20/08/2012)   ஆகிய இரு தினங்களும் காலை மணி 8:30-க்கு திருமந்திரம் முழுமையாக பாராயணம் செய்யப்பட உள்ளது அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

தேதி  :   ஆவணி மாதம் 3 மற்றும் 4-ம் தேதி (19/08/2012 & 20/08/2012) 
நேரம் :  காலை  8:30 
இடம் :  அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம்,             
              3, காமன்வெல்த் டிரைவ்,            
              சிங்கப்பூர் 149594.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம்,
சைவ சித்தாந்த மாணவர்கள்,சிங்கப்பூர்.Wednesday, July 25, 2012

32 ஆம் திருமுறை மாநாடு

32 ஆம் திருமுறை மாநாடு 

27 சூலை 2012 முதல்  29 சூலை 2012 வரை
அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவில் 
டேங் சாலை , சிங்கப்பூர் 

அன்புள்ள சிவநேயச் செல்வர்களே,

பன்னிரு திருமுறைகள் வழியே சைவ சமயத்தின் சிறப்பு , பெருமை, நெறிமுறைகள் , இவைபற்றி அனைவரும் நன்கு தெளிவாக அறிந்து சொள்ளுதல், திருமுறைகளை ஓதிப் பயன் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் முப்பத்திரண்டாம் திருமுறை மாநாடு 2012 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் நாள் முதல் 29 ஆம் நாள் வரை (வெள்ளிக்கிழமை , காரிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மூன்று நாட்களிலும் சிங்கப்பூர் டேங் சாலை , அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது, மாநாட்டின் ஒரு அங்கமான அறுபத்து மூவர் குரு பூசை விழா மட்டும் டெப்போ சாலையிலுள்ள அருள்மிகு ருத்திர காளியம்மன் ஆலயத் திருமண மணடபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 முதல் பிற்ப்பகல் 1.00 மணிவரை நடைபெறும் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக ஜோடார்ன் நாட்டிற்கான , உறைவிடம் கொள்ளாத, சிங்கப்பூர் அரசத் தூதர் திரு, கே.கேசவபாணி அவர்கள் பங்கேற்கிறார்கள், தமிழ்நாட்டின் பவானியிலிருந்து வரும் சிவத்திரு.அ . தியாகராசன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புச் சொற்ப்பொழிவுகளை  வழங்குகிறார்கள்.

உங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, எல்லாம் வல்ல சிவபெருமான் அருளைப் பெறுங்கள் என்று பணிவன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

திருமுறை மாநாட்டு எற்பாட்டுக் குழுவினர் 

நிகழ்ச்சி நிரல் 
தமிழ் : http://singaithirumurai.org/TM32-Invitation-Tamil.pdf
ஆங்கிலம் : http://singaithirumurai.org/TM32-Invitation-English.pdf 

Thursday, June 14, 2012

திருவாசக முற்றோதல்

திருச்சிற்றம்பலம்

திருவாசக முற்றோதல்

௨௪-௦௬-௨௦௧௨ (24-06-2012) , ஞாயிற்றுக்கிழமை ஆணி மாதம் மக நட்சத்திரம் மாணிக்கவாசகர் பெருமான் குருபூசை தினம்,ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் அன்றைய தினம் மாலை ௪ (4) மணிக்கு மதுரை பொன்.முத்துக்குமரன் ஒதுவாமூர்த்தி வழி நடத்த திருவாசகம் முழுமையாக பாராயணம் செய்யப்பட உள்ளது அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

சைவ சித்தாந்த மாணவர்கள்,
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்,சிங்கப்பூர்.

Saturday, April 3, 2010

திருச்சிற்றம்பலம்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


-சேக்கிழார்


எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.


http://www.thevaaram.org/
 

My Blog List

Followers